செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (05:01 IST)

நீதிமன்ற அதிகாரிகள் முன் பாத்ரூமில் திருமணம் செய்த காதல் ஜோடி

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று கூறுவதுண்டு. ஆனால் தற்காலத்தில் தண்ணீருக்குள், விண்வெளியில் என வித்தியாசமான திருமணங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி சமீபத்தில் பாத்ரூமில் திருமணம் செய்து கொண்டனர்.

பிரைன் ஸ்கல்ஸ் மற்றும் மரியா ஸ்கல்ஸ் ஆகிய அமெரிக்க காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நீதிமன்றத்தை அணுகினர். திருமண நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணமகன் பிரைனின் தாயார், நீதிமன்ற வளாகத்தில் உள்ள பாத்ரூமில் மூச்சுத்திணறல் காரணமாக கீழே விழுந்துவிட்டதாக தகவல் வெளிவந்தது.

உடனடியாக அங்கு சென்ற காதல் ஜோடி, பின்னர் தாயாரின் உடல்நிலையை கணக்கில் கொண்டு வேறொரு நாளில் திருமணத்தை வைத்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் நீதிமன்ற அதிகாரிகள் தேவைப்பட்டால் பாத்ரூமிலேயே திருமணம் செய்து வைக்க தாங்கள் தயார் கூற, அதற்கு பிரைனின் தாயாரும் சம்மதிக்க இருவருக்கும் பாத்ரூமிலேயே அதிகாரிகள் திருமணம் செய்து வைத்தனர்.