கொரோனா வைரஸ் பாதித்தவரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள்: வடகொரியாவில் பரபரப்பு

கொரோனா வைரஸ் பாதித்தவரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள்
Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (22:50 IST)
கொரோனா வைரஸ் பாதித்தவரை சுட்டுக்கொன்ற அதிகாரிகள்
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 1500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாகவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரசால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முற்றிலும் தடை பெற்றிருப்பதாகவும் சீனாவில் இருந்து வெளிநாடு செல்லும் விமானங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் சீனாவில் மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனை அடுத்து வடகொரியாவில் வைரஸ் பாதிப்பு ஒரு சிலருக்கு இருப்பதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் வட கொரியாவை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதனையும் மீறி அவர் வெளியே சென்றதாகவும் இதனையடுத்து அதிகாரிகள் வைரஸ் பாதித்த அந்த நபரை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது
இருப்பினும் வட கொரிய அரசு இதனை மறுத்துள்ளது. தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்த யாருமில்லை என்றும் இந்த தகவல் வதந்தி என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :