புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (10:42 IST)

ஒரே நாளில் 3 லட்சம்... அமெரிக்காவில் மும்மடங்காக உயர்ந்த பாதிப்பு!

தினசரி கொரோனா தொற்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 3,09,336 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா வேரியண்டான ஒமிக்ரான் தற்போது பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக அமெரிக்காவில் ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் தென் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென் ஆப்பிரிக்க நாடுகளான போட்ஸ்வானா, தென்ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே, நமீபியா, எஸ்வாடினி, லெசோதோ மற்றும் மாளவி ஆகிய நாடுகளுக்கு விதித்த தடையை தளர்த்தி விமான சேவைக்கு அனுமதி அளித்துள்ளார்.
 
ஆனால், அங்கு தினசரி கொரோனா தொற்று 1 லட்சமாக இருந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 3,09,336 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆப்ரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண தடையை ஜோ பிடன் அரசு நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும் அமெரிக்காவில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து தடுப்பூசி நடவடிக்கைகளை பிடன் அரசு தீவிரப்படுத்தி உள்ளது.