வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (10:49 IST)

ஒயின் குடிப்பவரா நீங்கள்? அப்போ அவசியம் படிங்க!!

அளவுக்கு அதிகமாக ஒயின் அருந்துவோர் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு, விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. 


 
 
அதில், சர்வதேச அளவில் உள்ள புற்றுநோயாளிகளில், 3.6% பேர் மதுப்பழக்கம் கொண்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அளவுக்கு அதிகமாக ஒயின் அருந்துவோருக்கு தோல் புற்றுநோய் ஏற்படும் என்று, ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிகளவில் ஆல்கஹால் உடலில் சேர்வதால், சூரிய ஒளி போன்றவற்றை தோலுக்குள் ஊடுருவச் செய்யாமல் தடுத்து விடுகிறது. 
 
இதனால், உடலின் இயக்க விதிகளில் மாற்றம் ஏற்படுகிறது. இது படிப்படியாக, புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பொதுவாக, வெள்ளை நிற ஒயின் அருந்துவோருக்கே, உடலில் இத்தகைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், ரெட் ஒயினில் அதிக நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதால் இந்த பாதிப்பு ஏற்படாது எனவும் அமெரிக்கப் பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இது மட்டுமின்றி, ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் உணவுப் பொருட்களால், மனித உடலில் உள்ள டிஎன்ஏ செயல்பாடு வெகுவாகப் பாதிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்து உள்ளனர்.