1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 5 ஜூலை 2017 (13:12 IST)

இந்தியாவுடன் சமரசமா? வாய்ப்பே இல்லை: சீனா அதிரடி!!

இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோகாலம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகளுக்கு இடையே எல்லைத்தகராறு நிலவி வருகிறது. 


 
 
பூடானை ஆக்கிரமிக்கும் வகையில், சீன ராணுவத்தினர் சாலை அமைத்து வருகிறார்கள். மேலும், இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகளையும் அழித்தனர். 
 
இதனால், ஒரு மாத காலமாக அங்கு போர் அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியா இந்த பிரச்சனையை சரியாக கையாளவில்லை என்றால் போர் வெடிக்கும் என சீனா தெரிவித்திருந்தது.
 
மேலும், சிக்கிம் செக்டாரில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சனையை தீர்க்கும் பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது. 
 
இந்திய ராணுவம் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி வெளியேறினால் தான் இந்தியா - சீனா இடையில் ஒரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடைபெரும் என தெவிக்கப்பட்டுள்ளது.