1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (14:33 IST)

வடமாநில திருடர்கள் வருவதற்கான குறியீடுகள் என்னென்ன??

வடமாநிலத்திலிருந்து வரும் கொள்ளை கும்பல் கொள்ளையடிக்கபோகும் வீட்டின் முன் இடும் குறியீடுகளை இணையத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

வடமாநிலங்களிலிருந்து கொள்ளையடிக்க வரும் நபர்கள் முதலில் வீட்டை நோட்டம் இடுவர். பின்பு அந்த வீடுகளின் முன் சில குறியீடுகள் வரைந்து செல்வர். அதன் பின்பு அந்த குறியீடுகளை வைத்து கொள்ளையர்கள் அந்த வீடுகளில் வந்து கொள்ளையடித்து செல்வர்.

இந்நிலையில் இந்த குறியீடுகளையும், அதற்கான அர்த்தங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், அவர் “இந்த குறியீடுகள் வீட்டின் முன் இருந்தால், காவல் துறையை தொடர்பு கொள்ளவும்” என குறிப்பிட்டுள்ளார்.