சீனாவின் பழமையான மரப்பாலம் தீயில் எரிந்து சேதம்!
சீனாவின் பழமையான மரப்பாலம் ஒன்று தீயில் எரிந்து நாசமானது.
சீனாவில் கிழக்கு புஜியான் மாகாணத்தில் உள்ள பிங்னன் கவுண்டி என்ற பகுதியில் 960 முதல் 1127 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஆட்சி செய்த சாங் வம்சத்தில் அங்கு கட்டப்பட்ட மிக நீண்ட மரப்பாலம்(98.3) பல சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வந்தது.
சீனாவில் உள்ள புராதன இடங்களில் இந்தப் பாலமும் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்தப் பாலம் தீப் பிடித்து எரிந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால்ல, சில நிமிடங்களிலேயே இப்பாடல் எரிந்து விழுந்தது. சீனாவில் கலாச்சார பெருமை கொண்ட நுட்பமாக பாலம் எரிந்துள்ளது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.