திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (12:44 IST)

எங்களை எதிர்க்க முடியாம கோரோனாவை பரப்பி விட்டாங்க! – சீன அதிகாரி பகீர் குற்றச்சாட்டு

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் அமெரிக்காவால் பரப்பப்பட்டதாக சீன அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவிலிருந்து தொடங்கி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் பயோ ஆயுத பரிசோதனையின் போது கொரோனா பரவியதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் சிலர் குண்டை தூக்கி போட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த சீனா பாம்பு மற்றும் எறும்பு திண்ணி போன்ற உயிரினங்களில் இருந்து இது பரவியிருப்பதாக கூறியது.

இந்நிலையில் சீனாவின் உள்ளூர் வலைதளங்கள் சில அமெரிக்க அரசுதான் சீனாவை எதிர்க்க திறன் போதாமல் இந்த வைரஸை சீனாவுக்குள் பரவ விட்டிருப்பதாக ஆதாரம் இல்லாமல் செய்திகளை அவிழ்த்து விட்டன. இந்நிலையில் சீன வெளியுறவு துறை அமைச்சக் செய்தி தொடர்பாளர் ஸோ லிஜியான் அமெரிக்க ராணுவம்தான் சீனாவில் கொரோனாவை பரப்பியதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ”அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது? எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்? வெளிப்படையாக பேசி பழகுங்கள். இந்த வைரஸை வூகானுக்கு அமெரிக்க ராணுவம்தான் கொண்டு வந்திருக்கும். இதுகுறித்து அமெரிக்கா விளக்கம் அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போர் கடுமையாக நடந்து வந்த நிலையில் இந்த வைரஸை அமெரிக்க பரப்பியதாக சீன அதிகாரி குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.