1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:58 IST)

ஐபோனுக்காக கிட்னி விற்பனை; தற்போது உயிருக்கு போராட்டம்! – சீன இளைஞரின் சோக கதை!

சில ஆண்டுகள் முன்னதாக ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக கிட்னியை விற்ற நபர் தற்போது கிட்னி இல்லாமல் உயிருக்கு போராடி வரும் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலக செல்போன் சந்தையில் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படுவதும், அதேசமயம் செல்போன் நிறுவனங்களிலேயே அதிக விலைக்கு விற்பதுமாக ஆப்பிள் ஐபோன்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான புதிய மாடல் ஐபோனை வாங்க சீனாவை சேர்ந்த வாங் என்ற இளைஞர் தனது கிட்னியில் ஒன்றை 2.50 லட்சத்திற்கு விற்றார். கிட்னியை விற்று வாங் ஐபோன் வாங்கிய சம்பவம் அப்போது பெரிதாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது வாங் உடல்நிலை மோசமடைந்துள்ளது. ஐபோனுக்காக ஒரு கிட்னியை விற்றுவிட்ட நிலையில் மீதமுள்ள ஒரு கிட்னியும் பாதிக்கப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.