செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2020 (17:31 IST)

ஜோ பிடன் எனக்கு பதவி குடுத்தால்.. எனக்குதான் ஆபத்து! – ஒபாமா ஓபன் டாக்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றுள்ள நிலையில் அமைச்சரவை பதவி தந்தால் ஏற்க மாட்டேன் என முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கையில் ஜோ பிடன் வென்றதாக கூறப்பட்ட நிலையிலும், இந்த வெற்றியை நடப்பு அதிபர் ட்ரம்ப் ஒத்துக் கொள்ளாததால் அமெரிக்காவில் பரபரப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரங்கள் குறித்து கவலைப்படாமல் தனது அமைச்சரவையில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பது குறித்த பட்டியல் தயாரித்து வருகிறாராம் ஜோ பிடன்.

அதில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பெயரும் இடம் பெற்றுள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ஒபாமா “நான் ஜோ பிடனின் ஆட்சியில் அமைச்சரவையில் அங்கம் வகிக்க நினைக்கவில்லை. அப்படியான பதவிகள் அளிக்கப்படுவதை தவிர்த்து விடுவேன். அப்படி தவிர்க்காவிட்டால் என் மனைவி என்னை விட்டு போய் விடுவார். ஆனால் நான் ஜோ பிடனுக்கு தேவையான உதவிகளை செய்வேன்” என கூறியுள்ளார்.