புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 24 ஜூலை 2017 (19:22 IST)

உலகின் மிக ஆழமான மெட்ரோ ரயில் நிலையம்: சீனா அதிரடி திட்டம்!!

பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணியில் சீனா தீவிரம் காட்டியுள்ளது. பூமிக்கு அடியில் 31 மாடியில் ரயில் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. 


 
 
சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் இந்த 31 மாடி கட்டிடம் அமைய உள்ளது. இது சுமார் 94 மீட்டர் ஆழம் செல்லும்.
 
சாலையில் இருந்து பூமிக்கு அடியில் உள்ள ரயில் நிலையம் செல்ல எக்ஸ்லேட்டர் அமைக்கப்படுகிறது. பூமிக்கு அடியில் உள்ள ரயில் பிளாட்பாரங்களுக்கு 3 நிமிடத்தில் செல்ல முடியும். இதன் மூலம் சீனாவும் மிக ஆழமான மெட்ரோ ரயில் நிலையங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக மாறவுள்ளது.
 
வடகொரியாவில் 110 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.