1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. US cycle race accident

ஜாலியாக நடந்த சைக்கிள் பந்தயம்; திடீரென புகுந்த லாரி! – அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

World
அமெரிக்காவில் நடந்த சைக்கிள் போட்டியில் உள்ளே திடீரென் நுழைந்த லாரி சைக்கிள் வீரர்களை மோதி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சோலோ நகரில் நேற்று முன்தினம் சைக்கிள் பந்தயம் விமரிசையாக நடந்துள்ளது. ஏராளமான உள்ளூர் மக்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் வாகனங்களற்ற சாலையில் சைக்கிள்களை மக்கள் ஜாலியாக ஓட்டி சென்றுள்ளனர். அப்போது திடீரென அந்த சாலையில் தோன்றிய லாரி ஒன்று வேகமாக வந்து சைக்கிளில் சென்றவர்களை மோதி தூக்கி வீசியது.

இதனால் சைக்கிள் பந்தய வீரர்கள் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தப்பி சென்ற லாரி டிரைவரை சுட்டு பிடித்த போலீசார், பொதுமக்களை தாக்கியது ஏன் என்பது குறித்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
கொரோனா காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக உள்ளது! – பிரதமர் மோடி யோகா தின வாழ்த்து!