சீனாவில் மீண்டும் கொரோனா! இந்த தடவை மீன் மூலமாக!? – மீண்டும் அதிர்ச்சி!
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.
சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் சீனாவில் பாதிப்புகள் குறைந்தன. இதனால் கடந்த 50 நாட்களாக சீனாவில் புதிய பாதிப்புகள் ஏதும் கண்டறியப்படாமல் இருந்தன.
இந்நிலையில் தற்போது புதியதாக 49 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதில் 10 பேர் வெளிநாட்டினர். பீஜிங்கில் இருந்து தற்போது வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால் சீனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பீஜிங் மீன் மார்க்கெட்டில் மீன் வெட்ட பயன்படுத்தப்படும் கட்டையின் மூலமாக இந்த வைரஸ் பரவியதாக சீனாவின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.