வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2023 (10:14 IST)

ஒரு மில்லியன் டாலர் பணத்தை ஹெலிகாப்டரில் இருந்து கொட்டிய நடிகர்.. பரபர்ப்பு தகவல்..!

செக் நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்,  கமில் பார்டோசெக் என்பவர் ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார், அது மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த வீடியோவில், நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை எடுக்க போட்டி போடும் காட்சியை காணலாம்.
 
பார்டோசெக்கின் இந்த நிகழ்வு சில எதிர்வினைகளை சந்தித்துள்ளது. சிலர் அவரது தாராள மனப்பான்மையை பாராட்டி இருந்தாலும் பலர் அவரை பணத்தை வீணடிப்பதாக விமர்சித்துள்ளனர்.
 
இந்த செயல் செக் நாட்டின் பொருளாதாரம் அல்லது சமூகத்தில் ஏதேனும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran