ஓராண்டுக்கு இலவச Subscription.. பயனர்களை அதிகரிக்க ChatGPT எடுத்த அதிரடி முடிவு..!
ChatGPTயின் ஒரு சில பகுதிகள் தற்போது கட்டண முறையாக இருக்கும் நிலையில், அனைவருக்கும் இலவசமாக வழங்க போவதாகவும், ஓராண்டுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக சேட்ஜிபிடி-யின் அனைத்து வெர்ஷன்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சேட்ஜிபிடியின் ஓப்பன் ஏஐ நிறுவனம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற தொழில்களை போல, ஏஐ தொழில்நுட்பத் துறையிலும் தற்போது மிகப்பெரிய போட்டி நிலவி வரும் நிலையில், சேட்ஜிபிடி தனது சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த ஓராண்டு இலவச திட்டத்தை அறிவித்துள்ளது.
நவம்பர் 4 முதல் புதிதாக சைன்அப் செய்யும் பயனர்களுக்கு மட்டும் இது பொருந்தும். மாதம் ரூ.1999 கட்டணமாக பெறப்படும் சேட்ஜிபிடி ப்ரீமியமுக்கு அடுத்தபடியாக, மாதம் ரூ.399 கட்டணத்துடன் சேட்ஜிபிடி தற்போது சேவையை வழங்கி வருகிறது. இந்தச் சேவைகள் ஓராண்டுக்கு இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva