செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2017 (14:36 IST)

மூதாட்டியை கொல்ல முயன்ற பூனை; கைது செய்ய துடிக்கும் போலீஸார்

ஜப்பானில் மூதாட்டி ஒருவரை பூனை கொலை செய்ய முயன்றதையடுத்து தலைமறைவான பூனையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


 

 
ஜப்பான் டோக்கியோ நகரில் மயாகோ மாட்சுமோட்டா என்ற 80 வயது நிரம்பிய மூதாட்டி தனது மகளுடன் வசித்து வருகிறார். மகள் வெளியே சென்று வீடு திரும்பியபோது மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே மகள் தனது தாயை மருத்துவமனையில் அனுமதித்தார். 
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த பெண் வீட்டை விட்டு வெளியே சென்றபோது கதவை வெளியே பூட்டிவிட்டு சென்றுள்ளார். காவல்துறையினர் நடத்திய சோதனையில் புதிய மனிதர்களின் கைரேகை எதுவும் வீட்டில் பதியவில்லை.
 
மருத்துவமனையில் நினைவு திரும்பிய மூதாட்டி பூனை என்று கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வீட்டில் இருந்த பூனை மீது சந்தேகப்பட்டுள்ளனர். மேலும் மூதாட்டியின் முகத்தில் இருந்த கீறல்கள் அனைத்தும் பூனையின் நக கீறல்கள்.
 
சம்பவத்திற்கு பிறகு அந்த பூனை வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டது. இதனால் காவல்துறையினர் தற்போது அந்த பூனையை தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த மூதாட்டிக்கு நினைவு திரும்பிய பின்னரே கொலை முயற்சி சம்பவம் குறித்து தெளிவான விளக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.