வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2023 (09:46 IST)

சாதி பாகுபாட்டிற்கு தடை.. அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மசோதா..!

bill
சாதி பாகுபாட்டிற்கு தடை.. அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மசோதா..!
அமெரிக்காவில் உள்ள சியாட் என்ற நகரத்தில் சாதி பாட்டிற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து இந்த மசோதாவை நிறைவேற்றிய முதல் அமெரிக்க மாகாணம் என்ற பெருமை பெற்றுள்ளது. 
 
அமெரிக்காவிலேயே முதல் முறையாக நமது இயக்கம் என்ற அமைப்பு சாதி பாகுபாடுகள் மீதான தடை மசோதாவை கொண்டு வந்துள்ளது. இப்போது இந்த வெற்றியை நாடு முழுவதும் பரப்ப ஒரு இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் சியார் நகர கவுன்சில் அதிகாரி ஷமா சாவந்த் தெரிவித்துள்ளார் 
 
இந்த அவசர சட்டத்திற்கான தீர்மானத்தை ஷமா சாவந்த் முன் வைத்த நிலையில் இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து சியாட் நகரில் இனி ஜாதி, இனம், நிறம், பாலினம், மதம் மற்றும் தேசிய அடிப்படையில் பாகுபாடு காட்டுவது தடுக்கப்படுவதாகவும் சாதி பாகுபாடுகள் இனி தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva