சிறுவர்களையும், ஆண்களையும் பாலியல் வேட்கைக்கு பயன்படுத்திய வாடிகன் கார்டினல்


Caston| Last Updated: வெள்ளி, 29 ஜூலை 2016 (15:27 IST)
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்லார்ட் நகரை சேர்ந்த கார்டினல் ஜார்ஜ் பெல் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. 75 வயதான அவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனில் பணியாற்றி வருகிறார்.

 
 
1970 முதல் 1990 வரையிலான கால கட்டங்களில் கார்டினல் ஜார்ஜ் பெல் சிறுவர்கள் மற்றும் ஆண்களை பாலியல் வேட்கைக்கு பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.
 
1970-ஆம் ஆண்டுகளில் தண்ணீரில் நீந்திக்கொண்டிருக்கும்போது ஜார்ஜ் பெல் தங்களிடம் தவறாக நடந்ததாகவும், முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் 40 வயதான இருவர் புகார் அளித்துள்ளனர்.
 
ஆலய பாடகர் குழுவில் உள்ள 2 இளைஞர்களும் ஜார்ஜ் பெல் மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். மேலும் மூன்று சிறுவர்கள் முன் ஜார்ஜ் பெல் ஆடையின்றி நின்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இவை தவறான குற்றச்சாட்டு எனவும், அவதூறு பிரச்சாரம் எனவும் மறுத்துள்ள ஜார்ஜ் பெல் இது தனக்கு அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது என கூறியுள்ளார். இவர் மீதான இந்த குற்றச்சாடுகள் கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :