1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (17:59 IST)

ஒரு பர்கரின் விலை ரூ.23 ஆயிரம்: ரஷ்ய மக்கள் அதிர்ச்சி!

ஒரு பர்கரின் விலை ரூ.23 ஆயிரம்: ரஷ்ய மக்கள் அதிர்ச்சி!
ரஷ்யாவில் ஒரு பர்கரின் விலை 23 ஆயிரம் ரூபாய் என ஆன்லைனில் விற்கப்பட்டு வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதை அடுத்து பல நிறுவனங்கள் ரஷ்யாவில் உள்ள தங்கள் நிறுவனங்களை மூடி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் சமீபத்தில் ஒரு சில முன்னணி பர்கர் நிறுவனங்களும் ரஷ்யாவில் கடைகளை மூடி விட்டன. இருப்பினும் ஆன்லைனில் மட்டும் சப்ளை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ரஷ்யாவில் மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் தனது கிளைகளை மூடியதால் அங்கு ஆன்லைனில் மட்டும் பர்கர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 
 ஏராளமான பர்கர் ஆர்டர் வருவதால் மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் பர்கர் ஒன்றின் விலை 23 ஆயிரம் என விலையை உயர்த்தியுள்ளது ரஷ்ய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி மற்ற உணவு பண்டங்களின் விலையும் ரஷ்யாவில் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.