வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (12:53 IST)

பெங்களூருக்கு திடீரென வருகை தந்த பிரிட்டிஷ் ராணி கமீலா: என்ன காரணம்?

kameela
பெங்களூருக்கு திடீரென வருகை தந்த பிரிட்டிஷ் ராணி கமீலா: என்ன காரணம்?
இன்னும் ஒருசில தினங்களில் பிரிட்டிஷ் ராணி ஆக பதவி ஏற்க உள்ள கமீலா திடீரென பெங்களூருக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சார்லஸ் மனைவியும் பிரிட்டிஷ் ராணி ஆக பதவி ஏற்க உள்ளவருமான கமீலா சமீபத்தில் பெங்களூர் வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள செளக்யா என்ற பகுதிக்கு சென்றதாக தெரிகிறது 
 
10 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் பெங்களூரில் தங்கி உள்ளதாகவும் அவர் தனது அரச குடும்பத்தினருக்கான சிறப்பு பாதுகாப்பு படையுடன் வந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இது முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணம் என்றும் இதனை பொதுமைப்படுத்த வேண்டாம் என பெங்களூரு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கமிலா  8முறை பெங்களூரு வந்துள்ள நிலையில் இது அவரது ஒன்பதாவது முறை பயணம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva