வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (08:08 IST)

பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய்: பக்கிங்காம் அரண்மனை தகவல்..!

charles
பிரட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அவர்களுக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் 2023 ஆம் ஆண்டு மூன்றாம் சார்லஸ் அவர்கள் அந்நாட்டின் மன்னராக பதவி ஏற்று கொண்டார்.

75 வயதாகும் இவர் சமீப காலமாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு தற்போது புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் நோய் கண்டறிதல் சோதனை மூலம் மன்னர் மூன்றாம் சார்லஸ் அவர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக அவர் பொது நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னர் சார்லஸ் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அவர் விரைந்து குணமாகி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்றும் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது

Edited by Siva