பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:02 IST)
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜனவரியில் இந்திய குடியரசு தினத்தில் இந்தியா வருவதாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக அந்த பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. 
 
ஆனால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பை தொடர்ந்து போரிஸ் ஜான்சனின் திட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :