புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (12:47 IST)

உன்ன என்ன பண்றேன்னு பாரு! குடையுடன் மல்லுக்கட்டிய பிரதமர்! – வைரலாகும் வீடியோ!

நிகழ்ச்சி ஒன்றில் மக்கர் செய்த குடையுடன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மல்லுக்கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பிரிட்டன் பிரதமராக இருந்து வருபவர் போரிஸ் ஜான்சன். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு மழை பெய்ததால் குடை வழங்கப்பட்டுள்ளது. எல்லாரும் குடையை விரித்து பிடிக்க போரிஸ் ஜான்சனுக்கு குடையை விரிக்க தெரியாததால் நீண்ட நேரமாக அதனுடன் மல்லுக்கட்டியுள்ளார்.

ஒருவழியாக குடையை திறந்த பிறகு அது மீண்டும் மூடிக்கொள்ள அதை உபயோகிக்க தெரியாமல் போரிஸ் விழுப்பிதுங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.