புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (12:34 IST)

அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்! – அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை!

அமெரிக்க மாகாணமாக அலாஸ்காவின் கடல்பரப்பில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலாஸ்காவின் சாண்ட்பாயிண்ட் பகுதியிலிருந்து 4 மைல் தொலைவில் கடல்பகுதியில் உருவான சக்திவாய்ந்த நிலநடுக்கும் அலாஸ்காவின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியுள்ள இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பனிபிரதேசமான அலாஸ்காவில் ஏற்பட்ட பாதிப்பு நிலவரங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.