பூஸ்டர் டோஸ் தேவையில்லாத விஷயம்! – உலக சுகாதார அமைப்பு கண்டனம்!
உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி கிடைக்காத நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழை நாடுகளுக்கும், அதன் மக்களுக்கும் வளர்ந்த நிலையில் உள்ள நாடுகள் தடுப்பூசி வழங்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டு வருகிறது.
ஆனால் பல நாடுகளில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதோடு நில்லாமல் பூஸ்டர் டோஸ் செலுத்துவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு ஏழை நாடுகளில் ஒரு நாளைக்கு போடப்படும் முதல் தடுப்பூசியை விட பூஸ்டர் டோஸ்கள் வளர்ந்த நாடுகளில் அதிகமாக செலுத்தப்படுகின்றன. ஏழை நாடுகளில் எவ்வளவோ மக்கள் முதல் டோஸ் தடுப்பூசிக்கே காத்துக்கிடக்கும் நிலையில் பூஸ்டர் டோஸ் அவசியமற்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.