வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூன் 2018 (19:15 IST)

மோனிகாவிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது அவர் தனது செயலாளர் மோனிகா லெவின்ஸ்கியிடம் தவறாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் தனது வாழ்க்கை வரலாறு குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன், தனது செயலாளர் மோனிகாவிடம் தான் தவறாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
 
நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய பில்கிளிண்டன், ' மோனிகாவிடம் தவறாக நடந்து கொண்டதற்காக, அவரது குடும்பத்தினர், அமெரிக்க மக்கள் மற்றும் அமைச்சர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். மேலும் சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்பம் குறித்த மீட்டோ ஹேஷ்டாக்கிற்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்' என்று பில் கிளிண்டன் கூறியுள்ளார்.