பாராசூட்டில் பறந்த பைக்... பாலைவனத்தில் நடந்த வீரரின் சாகசம் ! பதறவைக்கும் வைரல் வீடியோ
இளைஞர்கள் இன்றைய சமூக ஊடகம் இல்லாமல் இருப்பதில்லை. உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் கூட நெட்டிசன்களின் கவனத்துக்கு வந்துவிடும்.
இந்நிலையில் பைக் சாகச வீரர், ஒரு பாலை வனத்தில் அதிவேகத்தில் மோட்டார் பைக்கில் சென்று, ஒரு மேடான பகுதியில் இருந்து பைக்கில் தாவிச் செல்லும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அந்த வீரர் பாலைவனத்தில் அதிவேகத்தில் பைக்கில் சீறிக் கொண்டு வருகிறார். அந்த வீரருக்கு எதவாது ஆகுமோ என அந்த வீடியோ பார்ப்பவர்கள் பதறிக் கொண்டிருக்கும்போது, அந்த வீரர், பைக் அந்தரத்தில் பாய்ந்து கொண்டிருக்கும்போதே அப்படியே குதிக்கிறார்.
அப்போது அவரது பாராசூட்டும் , பைக்கில் மாட்டப்பட்ட பாராசூட்டும் விரிகிறது. வீரருக்கும், பைக்கும் ஒன்றும் ஆகவில்லை இந்த சம்பவம் வைரல் ஆகி வருகிறது.