திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (11:09 IST)

உலக வரைபடத்தில் இருந்து உக்ரைனை நீக்க திட்டமா??

அண்டை நாட்டினர் மீது ரஷ்யா போர் தொடுத்தது வெட்ககேடான செயல் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு.


உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஷ்யா தான் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ரஷ்ய அடையாள அட்டைகளை அளித்து அப்பகுதிகளை ரஷ்யாவின் பிராந்தியமாக மாற்றி வருகிறது.

கடந்த 6 மாத காலமாக நடந்து வரும் போரால் இருதரப்பு ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் உக்ரைன் பொதுமக்களும் ஏராளமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் உக்ரைனின் பல பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அணு ஆயுதத்தை பயன்படுத்த ரஷ்யா ரகசிய திட்டமிடுவதாக ஐரோப்பிய நாடுகள் சந்தேகிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளின் இந்த சந்தேகம் தவறென்றும், அணு ஆயுதத்தை பயன்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் ரஷ்ய தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஐ.நா. பொதுச்சபையின் 77வது கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பின்வருமாறு பேசினார்…

அண்டை நாட்டினர் மீது ரஷ்யா போர் தொடுத்தது வெட்ககேடான செயல். உலக வரைபடத்தில் இருந்து இறையாண்மை நாடான உக்ரைனை நீக்கி விட ரஷ்யா முயற்சி எடுக்கிறது. ரஷ்யாவின் அத்துமீறலை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் சில பிராந்தியங்களை பொது வாக்கெடுப்பு நடத்தி அவற்றை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.