வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (14:25 IST)

33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாகிய கடற்கரை!!

33 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சூறாவளி காற்றால் மணற்பரப்புகள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மணல் பரப்புகள் உருவாகியுள்ளது. 


 
 
அயர்லாந்தில் அச்சீலீஸ் தீவுகளில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதியின் மொத்த ஜனத்தொகை 3000 தான். 
 
அச்சீலீஸ் தீவில் Dooagh என்னும் ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 1984 வரை கடற்கரை இருந்தது. அந்த வருடத்தில் அடித்த சூறாவளியில் கடற்கரையில் இருந்த மொத்த மணற்பரப்பும் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டது. 
 
இந்நிலையில், 33 வருடங்கள் கழித்து கடற்கரையில் மணல் சேர ஆரம்பித்துள்ளது. பின்னர் அடுத்த 10 நாட்களில் பல டன் மணல் சேர்ந்திருக்கிறது. இவை அங்கு 300 மீட்டர் நீளத்துக்கு புது கடற்கரையை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியபடுத்தியுள்ளது.