1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 29 மார்ச் 2017 (10:55 IST)

மசாஜ் சென்டரில் ஆஸ்திரிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

மசாஜ் மையத்தில் ஆஸ்திரிய பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெண், மசாஜ் மையத்திற்கு மசாஜ் செய்துக் கொள்வதற்காக விலை விவரம் பற்றி கேட்க வந்தபோது அப்பெண்ணின் அனுமதியின்றி கை மற்றும் அந்தரங்க பகுதிகளை தொட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். 
 
இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மசாஜ் மைய மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர். 
 
மேலும் அந்த மேலாளர் மீது இது போன்று ஏற்கனவே இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
அப்பெண் அளித்த புகார் குறித்து தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.