திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (08:52 IST)

மேற்கு வங்கத்தில் பல இடங்களில் மின்னல்; ஒரே நாளில் 26 பேர் பலி!

மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் பல இடங்களில் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வங்ககடலில் உருவான யாஸ் புயல் மேற்கு வங்கம், ஒடிசா அருகே கரையை கடந்த நிலையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து மக்களும் இன்னும் மீளாத நிலையில் மின்னல் வெட்டு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நேற்று ஒரு நாளில் பல இடங்களில் மின்னல் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.