வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2019 (11:00 IST)

ஒசாமா பின்லேடன் மகனை பற்றி தகவல் சொன்னால் ரூ. 7 கோடி பரிசு

கடந்த 2001 ஆம் ஆண்டு உலகின் வல்லரசு மற்றும் நாட்டாமை அண்ணனான அமெரிக்காவிலுள்ள பிரபல இரட்டை கோபுரத்தை விமானத்தால் தாக்கியதில் மூளையாக செயல்பட்டவன் ஒசாமா பிலேடன். இந்த தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்தனர். 
இதனையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு  அமெரிக்க ராணுவம்  யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தான் நாட்டுக்குள் சென்று அங்கு இருந்த ஒசாமாவை அதிரடியாக தாக்கி கொன்றது .தங்கள் இரட்டை கோபுரத் தாக்குதலுக்காக  பழிதீர்த்துக்கொண்டது.

 
இந்நிலையில் ஒசாமாவின் மகனான ஹம்சா பின்லேடன் வீடியோ ஒன்றை வெளியிட்டான் அதில் ஒசாமாவின் மறைவுக்கு காரணமான அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அனைத்து தீவிரவாத இயக்கங்களும் ஒன்றுபட வேண்டும் என பேசினார். தற்போது இவர்தான் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.
இதனையடுத்து ஹம்சா பின்லேடனை தேடப்படும் முக்கிய சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது. இந்நிலையில் ஹம்சா பின்லேடனை தேடும் பணியை அமெரிக்கா முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளதாகத் தெரிகிறது.