1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (13:23 IST)

நிலவை சுற்றத் தொடங்கிய ஓரியன் விண்கலம்! – நாசா வெளியிட்ட வீடியோ!

Artemis 1
நிலவுக்கு மனிதனை அனுப்பும் ஆர்டெமிஸ் ப்ராஜெக்டின் முதல் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் ராக்கெட் ஆர்டெமிஸ் 1 கடந்த நவம்பர் 16ம் தேதி நிலவு நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.

பூமியை வட்டமடித்து சுற்றுவட்ட பாதையிலிருந்து விலகி நிலவை நோக்கிய பயணத்தை தொடர்ந்த ஆர்டெமிஸ் தற்போது நிலவின் சுற்றுவட்டபாதையில் நுழைந்து நிலவை சுற்றுத் தொடங்கியுள்ளதை நாசா உறுதி செய்துள்ளது. இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கி பின்னர் மீண்டும் புறப்பட்டு பூமியை வந்து சேரும்.


இந்த திட்டத்தின் வெற்றியை பொறுத்து அடுத்த ஆண்டில் மனிதர்கள் உள்ள விண்கலன் நிலவுக்கு அனுப்பப்படும். ஆனால் அது நிலவில் தரையிறங்காமல் சந்திரனை சுற்றி பூமிக்கு வந்து சேரும். அதன்பின்னர் 2025ல் அனுப்பப்படும் விண்கலம் மனிதர்களுடன் நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விரிவான வீடியோ ஒன்றையும் நாசா தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Edit by Prasanth.K