வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (17:18 IST)

தீ விபத்திலிருந்து மனைவியை மீட்ட கணவன்: தீயில் கருகி பலி!

கோப்புப்படம்
அரபு அமீரகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவியை காப்பாற்ற தன் உயிரை விட்ட கணவனின் செயல் பலரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த அபு நினன் என்பவர் தனது மனைவி நீனுவுடன் அரபு அமீரகத்தில் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு நான்கு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்த வாரம் நினன் வீட்டில் திடீரென தீப்பற்றியதில் தம்பதிகள் இருவரும் காயமடைந்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நினன் உயிரிழந்த நிலையில் நீனு மெல்ல குணமாகி வருகிறார்.

இதுகுறித்து அவர்கள் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் கூறியபோது முதலில் நீனு மேல் தீப்பிடித்ததாகவும், உடனடியாக அவரை மீட்க வந்த நினன் மீது பிறகு தீ பரவியதாகவும் கூறியுள்ளனர். மனைவியை காப்பாற்ற என்ன செய்வதென்று தெரியாமல் தானும் நெருப்பில் வெந்து இறந்த கணவனின் செயல் பலருக்கு துக்கத்தை அளித்துள்ளது.