வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2017 (06:05 IST)

வெடித்து சிதறிய ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ். வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் ஆங்காங்கே வெடித்து சிதறி உலகையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா உள்பட பல நாடுகளின் விமான நிலையங்களில் அந்த போனுக்கு தடை விதிக்கப்பட்டது.



இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் வெடித்து சிதறியதாக அமெரிக்காவில் உள்ள அரிசோனா பகுதியை சேர்ந்த ஒருவர்  டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை ஓரிரு நாளில்  1.26 மில்லினுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

 ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் வெடித்த தகவல் கிடைத்ததும் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் விரைந்து சென்று வெடித்த போனை சோதனை செய்து வருகின்றனர். ஆப்பிள் வல்லுநர்கள் இந்த ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் வெடித்ததற்கான காரணத்தை அவர்கள் கண்டறிவார்கள் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ். வெடித்து சம்பவம் அதன் பயனாளிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.