1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (16:04 IST)

19 வயது பெண்ணை திருமணம் செய்த முதியவர்..வைரலாகும் போட்டோ

pakistan couple
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 70 வயது முதியவர் 19 வயது பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

இந்த உலகில் காதல் என்பது வயது, பணம், செல்வம் போன்ற எதையும் பார்க்காது. சில நேரங்களில்  சினிமாவில் வரும் வசனம் மாதிரி சில விசயங்கள்  நிஜ வாழ்வில் நடப்பதுண்டு.

அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த  பிரபல யூடியூபரான சையத் பஷீத் அலி தன் யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார்.

அதில்,   அந்த நாட்டைச் சேர்ந்த லியாகத் அலி (70) என்ற முதியவர், சுமைலா அலி (19) எனற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லாகூரில் காலையில்  நடைப்பயணம் சென்ற போது, சந்தித்ததாகவும், அது பின், காதலாம மாறியதாகவும் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து திருமணம் செய்துகொண்தாகவும் தெரிவித்துள்ளனர்.

வயது வித்தியாசம் பார்க்காத இவர்களின் திருமணம் சமூகவலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Edited by Sinoj