திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 செப்டம்பர் 2018 (20:48 IST)

தமிழிசையுடன் வாக்குவாதம் செய்த பெண் அதிரடி கைது

சென்னை-தூத்துகுடி விமானத்திலும், தூத்துகுடி விமான நிலையத்திலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுடன் வாக்குவாதம் செய்ததாக தமிழிசை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு பெண் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி அந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டு வருவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை  தமிழிசை உள்பட பாஜகவினர் 10 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் விசாரணை மட்டும் செய்து வருவதாக கூறப்படுகிறது.