செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 மே 2021 (12:33 IST)

மார்க்கெட் இழந்த தமன்னாவுக்கு மறுவாழ்வு கொடுத்த சீரிஸ்!

நடிகை தமன்னா நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் சீரியல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள நிலையில் வெப் சீரிஸ்களும் உருவாக ஆரம்பித்துள்ளன. இதனால் திரை நட்சத்திரங்களும் அதில் ஆர்வமாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள நவம்பர் ஸ்டோரி எனும் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதை ராம் சுப்ரமண்யம் இயக்கியுள்ளார். தமன்னா இதில் ஹேக்கராக நடித்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள நிலையில் வெப் சீரிஸ்களும் உருவாக ஆரம்பித்துள்ளன. இதனால் திரை நட்சத்திரங்களும் அதில் ஆர்வமாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள நவம்பர் ஸ்டோரி எனும் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதை ராம் சுப்ரமண்யம் இயக்கியுள்ளார். தமன்னா இதில் ஹேக்கராக நடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எந்த வாய்ப்புகளும் இல்லாமல் இருந்த நிலையில் இந்த சீரிஸின் வெற்றி தமன்னாவுக்கு இப்போது மறு வாழ்வு கொடுத்த்துள்ளது. இதனால் இப்போது அவருக்கு அதிகளவில் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளனவாம்.