வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (11:54 IST)

வேலை கிடைப்பதால்தான் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்: ப.சிதம்பரம்

P Chidambaram
பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை கிடைக்கவில்லை என்றும் தமிழ்நாட்டில் வேலை கிடைப்பதால் தான் வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று செய்தியாளர்களிடம் ப சிதம்பரம் பேசியபோது பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாத நிலையில் பிழைக்க வழியில்லாமல் வேலை கிடைக்கிறது என்று தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் என்று வட இந்தியர்களின் தமிழக வருகை குறித்து தெரிவித்தார். 
 
தமிழ்நாட்டிலிருந்து எவரும் வேலை இல்லாமல் அங்கே செல்வதில்லை என்றும் பெரியார் காமராஜர் அண்ணா உள்ளிட்டோர் வகுத்த கொள்கைகளுக்கு எதிரான கட்சி தான் பாஜக என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran