புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (14:33 IST)

”எனக்கு ’போர்’ அடிக்கிறது”: வைரலாகும் ட்ரம்ப்பின் டிவிட்டர் பதிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது டிவிட்டர் பக்கத்தில் “போரிங்” என பகிர்ந்துள்ள பதிவு டிவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பதவிக்கு வந்ததிலிருந்தே தனது டிவிட்டர் பக்கத்தில் பல சர்ச்சைக்குரிய பதிவுகளை பகிர்ந்து வருகிரார்.

இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தனக்கு போர் அடிப்பதாக தெரிவிக்கும் வகையில் ”போரிங்” என்று பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் ஏற்பட்ட பொருளாதார தடை காரணமாக ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என எச்சரித்திருந்தார்.

இதனை தொடர்ந்து உலக நாடுகள் மத்தியில் போர் பற்றிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்ரம்ப் “போரிங்” என பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் டிவிட்டர் பதிவு, உலகளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.