வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 27 ஜனவரி 2016 (20:13 IST)

கருப்பை நஞ்சுக்கொடியை உண்ணும் அமெரிக்க நடிகை

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான கோலீன் ரூனி கருப்பையின் நஞ்சுக்கொடியை மாத்திரைகளாக்கி சாப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 


 

 
பிரபல கால்பந்தாட்ட வீரரான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வேய்ன் ரூனியின் மனைவி தொலைக்காட்சி நடிகை கோலீன் ரூனி.
 
இவர் தனது கருப்பையின் நஞ்சுக்கொடியை மாத்திரைகளாக்கி சாப்பிடத் தொடங்கியுள்ளார்.
 
பிரசவத்திற்கு பின்னர் உடல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கவும், புத்துணர்ச்சி பெறவும் கருவுக்கு ஊட்டம் கொடுக்கும் உறுப்பான நஞ்சுக்கொடி உதவிகரமாக இருப்பதாக அறியவந்த அவர், சமீபத்தில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தார்.
 
அப்போது, கருப்பையில் ஒட்டியிருந்த நஞ்சுக்கொடியை பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு கோலீன் அனுப்பி வைத்திருந்தார்.
 
இந்த நிறுவனம், அந்த நஞ்சுக்கொடியை உலரவைத்து, பதப்படுத்தி, பின்னர் பொடியாக்கி, அதை மாத்திரை வடிவில் தயாரித்து அனுப்பி வைத்தது.
 
இந்த நஞ்சுக்கொடியால் செய்யப்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டு வருவதாக அவர் தனது, டுவிட்டர் பக்கத்தில் கோலீன் ரூனி தெரிவித்துள்ளார்.
 
முன்னர், பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்டாஷியன் தனது இரண்டு பிரசவத்தின் போது கிடைத்த நஞ்சுக்கொடிகளை மாத்திரைகளாக்கி சாப்பிட்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.