வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2017 (17:58 IST)

பாகிஸ்தான் மீது பாய காத்திருக்கும் அமெரிக்கா: டிரம்ப் நேரடி எச்சரிக்கை!!

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நகர்வை முன்னெடுத்து வருகிறார். 


 
 
இந்நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால் அமெரிக்கா அமைதியாக பார்த்துக்கொண்டிருக்காது என நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். 
 
மேலும், பாகிஸ்தான் எங்களுடைய வழிக்கு வரவில்லை என்றால் அந்த நாட்டின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க தயார் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
 
அதோடு பாகிஸ்தான் பயங்கரவாத புகலிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறினால் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.