வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (12:21 IST)

பிரசவத்துக்குத் தாய்வீடு சென்ற மனைவியுடன் சண்டை – முடிவில் நடந்த விபரீதம் !

பிரசவத்துக்காக தனது தாய்வீட்டுக்கு செனறிருந்த தனது மனைவியை திரும்ப அழைக்க சென்ற கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோயம்புத்தூரில் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் இடையார்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மற்றும் ஷாலினி தம்பதியினர். ஷாலினி கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்துக்காக அவரைத் தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவரைத் திரும்பவும் தனது வீட்டுக்கு அழைப்பதற்காக ராஜேந்திரன் மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்ற ராஜேந்திரனிடம் ‘மகளை அனுப்ப முடியாது என்றும் சம்பாதிக்க துப்பில்லாதவன்’ என்றும் அவரது மாமியார் அவமதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் இருவரையும் கடுமையாகத் தாக்கிவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த விஷயத்தை அறிந்த ஷாலியின் தந்தை தங்கமணி ஆத்திரமடைந்த தங்கமணி ஆவேசமாக ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் நடந்த சண்டையில் தங்கமணி, தனது மருமகனைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இது சம்மந்தமாக தகவல் போலிஸுக்குத் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.