1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (06:50 IST)

கைதுக்கு பயந்து தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு முன்னாள் அதிபர் தற்கொலை!

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலன் கார்சியா என்பவர் இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையிலும், 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலும் பெரு நாட்டின் அதிபராக இருந்தவர் அலர் கார்சியா. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டதை அடுத்து அவரிடம் விசாரணை செய்ய போலீசார் அவரது இல்லத்திற்கு வந்தனர். விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது
 
இதனையடுத்து தனது வீட்டில் அலன் கார்சியா துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்துவிட்டார். அலன் கார்சியா மரணத்தை தற்போதைய அதிபர் மார்ட்டின் விஜ்காரியா உறுதி செய்துள்ளார்.
 
மரணம் அடைந்த அலன் கார்சியா ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருவதால் பெரு நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன