20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் டிரா –நூலிழையில் வெற்றியை இழந்த பாகிஸ்தான்

Last Updated: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (10:19 IST)
ஆஸ்திரேலியா பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இருதரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

துபாயில் 11-ந்தேதி டொடங்கிய முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் மூத்தவீரர் ஹஃபீஸ் மற்றும் சோஹைலின் அபாரமான சதத்தால் 486 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை குவித்தது.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிஞ்ச்(62) மற்றும் கவாஜா(85) தவிர மற்றவர்கள் சொதப்ப அந்த அணி 202 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 280 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இந்நிலையில் 280 ரன்கள் முன்னிலையோடு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேரை அறிவித்தது ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 462 ரன்கள் கொடுக்கப்பட்டது.

மீதம் ஒன்றரை நாட்கள் இருந்த நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி போட்டியை சமன் செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பிஞ்ச் 49 ரன்களும், கவாஜா 141 ரன்களும், ட்ராவிஸ் ஹெட் 72 ரன்களும், டிம் பெயின் 61 ரன்களும் எடுத்து அணியை விக்கெட் வீழ்ச்சியிலுந்து தடுத்து நிறுத்தினர். ஐந்தாம் ஆட்ட முடிவில் அந்த 8 விக்கெட்களை இழந்து 362 ரன்களை குவித்து போட்டியை சம்ன் செய்தார்.

பாகிஸ்தான் கடந்த 2015 லிருந்து இதுவரை விளையாடியுள்ள 22 போட்டிகளில் முதன் முறையாக டிரா செய்துள்ளது. அதே போல ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுள்ள 19 டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக போட்டி சமனில் முடிந்துள்ளது. இதில் 13 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும்ம், 3 போட்டிகளில் பாகிஸ்தானும் வெற்றியும் பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 85 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 141 ரன்களும் குவித்து ஆஸ்திரேலிய அணியை தோல்வியிலிருந்து மீட்ட உஸ்மான் கவாஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இதில் மேலும் படிக்கவும் :