1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2016 (11:09 IST)

நேபாள மலைப்பகுதியில் சென்ற விமானம் மாயமானது: தேடுதல் பணிகள் தீவிரம்

நேபாள மலைப்பகுதியில் சென்ற விமானம் மாயமானது: தேடுதல் பணிகள் தீவிரம்
நேபாளத்தில் 23 பேருடன் சென்ற சிறியரக விமானம் ஒன்று மலைப்பகுதியில் காணாமல் போனது. 


 

 
நேபாளத்தில் மேற்கு பகுதியில், இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 23 பேருடன் சென்ற விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது.

பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் போகாராவில் இருந்து ஜோம்சோம் சென்ற விமானம் மலைப்பகுதியில் சென்றபோது, அந்த விமானம் மாயமாகியுள்ளது.
 
இந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 18 நிமிடங்களில் விமானநிலைய கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமானம் செல்லும் இரண்டு விமான நிலையங்கள் இடையே எந்தஒரு ஒரு விமான இறங்கு தளமும் இல்லை.
 
இதைத் தொடர்ந்து அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. விமானத்தை தேடும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், மோசமான வானிலையின் காரணமாக தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மாயமான விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.