திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (16:12 IST)

அதிகரிக்கும் எய்ட்ஸ்: ஓரினச்சேர்க்கையே காரணம்...

சீனாவில் எய்ட்ஸ் நோய் ஓரினச்சேர்க்கையால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாம். அந்நாட்டு சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இதுவரை 2018 ஆம் ஆண்டின் காலாண்டில் மட்டும் 40,000 நோயாளிகள் எய்ட்ஸ் பாதிப்பால் மருத்துவமனைகளை அனுகியுள்ளனர். முற்காலங்களில் ரத்தம் வழங்குதல் மூலமாக எய்ட்ஸ் பரவி வந்தது. 
 
ஆனால், தற்போது உடலுறவால் அதிக அளவில் எய்ட்ஸ் பரவுவதாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்களின் பாலியல் தொடர்புகளாலேயே அதிகம் பரவுவதாக கூறப்படுகிறது. 
 
70-90 சதவீத ஓரினச்சேர்க்கையாளர்கள் பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளை வைத்துக்கொள்வதால் ஆண்டுக்கு சுமார் 1,00,000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதாக எண்ணிக்கை வெளியாகியுள்ளது.