வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (08:09 IST)

பள்ளியில் கொடுக்கப்பட்ட நூதன தண்டனை - பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

சீனாவில் பள்ளி ஒன்றில் மாணவனுக்கு கொடுத்த நூதன தண்டனையால் அந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹனான் மாகாணத்தில் சங் என்ற 16 வயது மாணவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தான். சம்பவ தினத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவன் பாட வேளையில் சக மாணவனுடன் பேசிக்கொண்டிருந்தான்.
 
இதனால் டென்ஷனான ஆசிரியர் மாணவனை தவளை போல் குதித்து வருமாறு நூதன தண்டனை வழங்கினார். மாணவனும் கொடுக்கப்பட்ட தண்டனையை செய்து முடித்தான். சிறிது நேரத்தில் மாணவன் மயக்கம் போட்டு கீழே விழுந்தான்.
இதனால் பதறிப்போன ஆசிரியர்கள் மாணவனை தூக்கிக்கொண்டு வேகவேகமாய் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் சங் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியர் கொடுத்த தண்டனையால் மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.