திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (21:53 IST)

ஆப்கானிஸ்தானின் தற்கொலை படைத் தாக்குதல் ...மதகுரு பலி!

ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் மதகுரு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து சமீபத்தில்  அமெரிக்கப் படைகள் விலகிய நிலையில், தலிபான் கைகளில் ஆட்சி சென்றது.  இந்த நிலையில், அங்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று தற்கொலை படைத்தாக்குதல் நடந்தது. இதில், தாலிபான் மத குரு ஹேக் ரஹி முல்லா உயிரிழந்தார்.

இந்த்த் தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியதாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் கூறினாலும் இதற்கு இதுவரை எந்த அமைப்புகள் பொறுப்பேற்க வில்லை இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்