1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (13:27 IST)

ஹசாரா இன தலைவர் சிலையை உடைத்த தலீபான்கள்! – அட்டூழியம் ஆரம்பமா?

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் ஹசாரா  இன தலைவர் சிலையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தங்கள் சித்தாந்ததுக்கு எதிரானவர்களை கொல்வார்கள் என பயந்து தலீபான் எதிர்ப்பு மக்கள், பல்வேறு இனக்குழுக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தலீபான்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவரையும் மன்னித்துவிட்டதாகவும், அனைவரும் வழக்கம்போல ஆப்கானிஸ்தானில் வாழலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தலீபான்கள் தொடர்ந்து பல்வேறு இனக்குழுக்களை அச்சுறுத்தி வருவதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஹசாரா இன தலைவரான அப்துல் அலி மசாரியின் சிலையை தலீபான்கள் உடைத்துள்ளனர். பெர்சிய மொழி பேசும் மலைவாழ் மக்களான ஹசாரா மக்களின் தலைவராக இருந்த அலி மசாரியை 1996ல் தலீபான்கள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.